Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தங்கம், வெள்ளி வர்த்தகத்துக்கு புதிய டிஜிட்டல் தளம் அறிமுகம்

தங்கம், வெள்ளி வர்த்தகத்துக்கு புதிய டிஜிட்டல் தளம் அறிமுகம்

தென்னிந்திய புல்லியன் சங்கத் தலைவர் சுரபி கே.கார்த்திக், சென்னை மொத்த நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் அசோக் குமார் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

தங்கம் முன்பதிவு வர்த்தகத்துக்கான புதிய டிஜிட்டல் தளத்தை லுனாவட்ஸ் புல்லியன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை சௌகார்பேட்டையில் செயல்படும் இந்நிறுவனம் தங்கம், வெள்ளிக் கட்டி வர்த்தகத்தை எளிமைப்படுத்தி, நாடு முழுவதும் தனது சந்தை இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சுஸ்வானி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜிதேந்திர ஜி படோலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தென்னிந்திய புல்லியன் சங்கத் தலைவர் சுரபி கே.கார்த்திக், சென்னை மொத்த நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் அசோக் குமார் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய டிஜிட்டல் தளம் மூலம் தங்கம், வெள்ளிக் கட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவோர் நேரடி விலை மாற்றங்களை அறிந்துகொள்ளவும், தங்கத்தை முன்பதிவு செய்யவும் முடியும். 24 மணி நேரமும் டிஜிட்டல் முறையில் அணுகக்கூடிய வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புல்லியன் விற்பனையாளர்கள் சந்தை நிலவரங்களைக் கண்காணித்து, வர்த்தக முடிவுகளை மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரியில் தனது தங்கம், வெள்ளி வர்த்தகத்தை தொடங்கிய நிறுவனம், இதுவரை 80-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், 200 வெள்ளி வர்த்தகர்கள் மற்றும் 500 முதலீட்டாளர்களைக் கொண்ட வலையமைப்பை உருவாக்கியுள்ளது. நிறுவன இயக்குநர் சுனில் குமார் லுனாவட் கூறும்போது, "டிஜிட்டல் வர்த்தக வசதிகள் மூலம் தங்கம், வெள்ளி வர்த்தகத்தை மேலும் எளிமைப்படுத்துவதுடன், இந்திய அளவில் சந்தை இருப்பை விரிவுபடுத்துவதே நிறுவனத்தின் நோக்கம்" என்றார்.

முந்தைய செய்தி
Airtel pivots to data centres, sovereign cloud “next area of focus”: Sunil Bharti Mittal
அடுத்த செய்தி
பிலிப்பைன்ஸ் எரிமலை வெடிப்பு: 94,000 பேர் நிலை என்ன?

தொடர்புடைய செய்திகள்